ETV Bharat / state

நெல் கொள்முதல் செய்வதில் அரசு சுணக்கம் காட்டுகிறது - ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் செய்வதில் அரசு சுணக்கம் காட்டுவதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நெல் கொள்முதல் செய்வதில் அரசு சுணக்கம் காட்டுகிறது - ஓ.எஸ்.மணியன் குற்றசாட்டு

author img

By

Published : Aug 29, 2021, 11:09 PM IST

மயிலாடுதுறை: செருதியூர் ஊராட்சி, முளப்பாக்கம் கிராமத்திலுள்ள ஐயனார் கோயில் களத்தில் ஏழு ஆண்டுகளாக திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது.

இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் இல்லாததால், இந்தாண்டு குறுவை பருவத்துக்கு திறக்கப்படவில்லை.

இருப்பினும், அப்பகுதி விவசாயிகள் இணைந்து அந்த களத்தில் மேற்கூரை அமைத்து, 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை அடுக்கிவைத்து அரசு கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் நேரில் ஆய்வு

இதுகுறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கொள்முதல் நிலையத்தை இன்று (ஆக.29) பார்வையிட்டனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ்.மணியன் கூறியதாவது, " கடந்த அதிமுக ஆட்சியில் 118 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. தற்போது 82 கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. எஞ்சிய கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட வேண்டும்.

விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் தாங்கள் அறுவடை செய்த நெல்லை வயல்களிலும், களத்திலும் வைத்துக்கொண்டு காத்திருக்கின்றனர். அவற்றை கொள்முதல் செய்வதில் அரசு சுணக்கம் காட்டுகிறது. ஆனால், தேக்கமின்றி நெல் கொள்முதல் செய்யப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் கூறுகிறார்.

நெல் கொள்முதல் செய்வதில் அரசு சுணக்கம் காட்டுகிறது - ஓ.எஸ்.மணியன் குற்றசாட்டு

சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவேன்

இப்பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விவசாயிகள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்த நெல்லை உதாசீனப்படுத்தாமல், அவற்றை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் செய்வதில் கால தாமதம் ஏற்படுவது குறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவேன்.

சம்பா பருவத்துக்கான காப்பீடு திட்டம் இன்னமும் தொடங்கப்படாமல் உள்ளது. நஷ்டஈடு என்பது வேறு, காப்பீட்டுத் தொகை என்பது வேறு. அதிமுக அரசு வெள்ள நிவாரணம், காப்பீட்டுத்தொகை இரண்டையும் வழங்கியது. விவசாயிகளை வேதனைப்படுத்தாமல் நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: புதிய ட்ரோன் விதிகள் 2021: வணிக செயல்பாடுகளின் புதிய நம்பிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.