தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் மக்களவைத்தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் இணைந்தார். இதனால் அதிருப்தியடைந்த நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்தனர்.
அதன்படி சீர்காழியில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், நகரத் தலைவருமான கனிவண்ணன் உள்ளிட்ட ஏழு பேர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.