மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தொன்மைவாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தின் 24ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை அரசினர் மேல்நிலைப் பள்ளியில், ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
அப்போது, அனைவரும் வாக்களிக்க வேண்டும். நல்ல அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அவரோடு ஆதீன கட்டளை ஸ்ரீஅம்பலவாண தம்பிரான் சுவாமிகள் ஜனநாயகக் கடமையாற்றினார்.