நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் நிர்வாகம் 70 வயதுள்ள சூலிகாம்பாள் என்ற யானையை பராமரித்து வந்தது. இந்த யானை ஒவ்வொரு ஆண்டும் யானைகள் நலவாழ்வு முகாமுக்கு சென்று வருவது வழக்கம்.
ஆனால், இந்த யானையை வயதான காரணத்தால் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நலவாழ்வு முகாமுக்கு கொண்டு செல்லவில்லை. இருப்பினும் ஆண்டுக்கு ஒருமுறை சூலிகாம்பாள் யானைக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வந்தது.
70 வயதானாலும் சூலிகாம்பாள் யானையின் பல், கால்நகங்கள், தோல், கண்பார்வை, ஜீரணசக்தி ஆகியவை நன்றாகவே இருந்தன. இந்த சூழலில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சூலிகாம்பாள் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க :