ETV Bharat / state

‘திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்க வேண்டும்’ - திருமா விருப்பம் - thirumavalavan

நாகை: திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

திருமா
author img

By

Published : Jun 23, 2019, 8:31 AM IST

நாகை மாவட்டம் சீர்காழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு அரசு குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கு போதிய முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. முதலமைச்சர் உட்பட அமைச்சர்களின் வீடுகளுக்குத் தண்ணீர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்படுகிறது.

ஆனால், சாதாரண மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. மாநில அரசு இதில் மெத்தனம் காட்டாமல் விரைந்து போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றார்.

மேலும், திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என். நேரு வெளியிட்ட கருத்து குறித்து பேசிய அவர்,

“மக்களவை-சட்டப்பேரவைத் தேர்தல் வேறு, உள்ளாட்சி மன்றத் தேர்தல் வேறு. இந்தத் தேர்தல்கள் அனைத்தும் வெவ்வேறு பின்னணி கொண்டவை. ஆகவே, இப்படிப்பட்ட கருத்துகள் அவ்வப்போது வெளிவரும். ஆனாலும் நாட்டு மக்களின் நலன் கருதி ஒருமித்த முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பில் திமுக தலைமை உள்ளது.

கூட்டணி சிதறாமல் உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றையும் ஒன்றுபட்டு சந்திப்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கே நல்லது என்று விடுதலைச் சிறுத்தைகள் நம்புகிறது.

திருமாவளவன்

அந்த அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் சிந்தித்து நல்ல முடிவை எடுப்பார் என்று நான் பெரிதும் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Intro:Body:

*நாகை மாவட்டம் சீர்காழியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி:*

 தமிழக அரசு குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கு அதை சீர் செய்வதற்கு போதிய முயற்சிகளை மேற்கொண்டதாக தெரியவில்லை முதலமைச்சர் உட்பட அமைச்சர்களின் வீடுகளுக்கு தண்ணீர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்பட்டு வரு்கிறது ஆனால் சாதாரண மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை மாநில அரசு இதில் மெத்தனம் காட்டாமல் விரைந்து போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மத்திய அரசும் காலம் தாழ்த்தாமல் தமிழக மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உடனடியாக செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்,ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்,தமிழக அரசு யாகம் செய்ய  செலவழிக்கும் தொகையை குடிநீருக்காக பயன்படுத்தலாம் வெளி மாநிலங்களில் இருந்து தண்ணீர் தருவதற்கு தயாராக இருந்தாலும் கூட அதைப் பெறுவதற்கு ஏன் தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது என்று தெரியவில்லை குறிப்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் ரயில் மூலம் குடிநீர் வழங்க முன் வந்திருக்கிறார் தமிழக அரசு உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை தேவைப்பட்டால் நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் என்று சொல்லுவது வறட்டு கவுரவம் இங்கே குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று சொல்ல வருகிறார்களா அல்லது அண்டை மாநிலத்தில் தண்ணீர் வாங்க வெக்க படுகிறார்களா என்று தெரியவில்லை இது மக்களுக்கு எதிரான நிலைப்பாடு ஆந்திராவில் இருந்து நமக்கு கிருஷ்ணாநதி மூலம் வழக்கமாக வரவேண்டிய தண்ணீரும் வந்து சேரவில்லை,அந்த தண்ணீரை வழங்குவதற்கு அதேபோல கர்நாடக அரசு நமக்கு காவிரியில் வழங்க வேண்டிய தண்ணீரை இந்த ஜூன் மாதத்திற்குள் வழங்கப்பட வேண்டிய தண்ணீரை தர வில்லை, காவிரியில் கர்நாடகம், கிருஷ்ணாவின் ஆந்திரமும் நமக்குத் தர வேண்டிய தண்ணீரை தந்தாலே வடக்கே உள்ள ஒரு பத்து பதினைந்து மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு தீரும் அளவுக்கு அதை வைத்து சமாளிக்க இயலும் அதைக் கேட்டு பெற வேண்டிய முயற்சியில் தமிழக அரசு ஈடுபடாமல் யாகம் நடத்த முயற்சியில் ஈடுபடுவது உள்ளபடியே வேதனைக்குரியது இது அவர்கள் திசை திருப்புவதற்காக நடத்துகிற நாடகமா அல்லது குடிநீரின்றி தவிக்கும் மக்களை கொச்சைப்படுத்துகிற செயலா என்று அவர்தான் விளக்க வேண்டும்,  நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்ற தேர்தல் வேறு உள்ளாட்சி மன்றத் தேர்தல் வேறு இந்த ஒவ்வொரு தேர்தலும் வெவ்வாறு பின்னணி கொண்டவை ஆகவே இப்படிப்பட்ட கருத்துக்கள் அவ்வப்போது வெளிவரும் ஆனாலும் நாட்டு நலன் கருதி மக்கள் நலன் கருதி ஒருமித்த முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பில் திமுக தலைமை உள்ளது கூட்டணி சிதறாமல் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றையும் ஒன்றுபட்டு சந்திப்பது கூட்டணிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திற்கே நல்லது என்று விடுதலைச் சிறுத்தைகள் நம்புகிறது அந்த அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சிந்தித்து நல்ல முடிவை மேற்கொள்வார் என்று நான் பெரிதும் நம்புகிறேன், முத்தலாக் சட்டத்தை தன்னுடைய மிருகபலத்தை  வைத்து நாடாளுமன்றத்தில் மக்கள் அவையில் பாரதிய ஜனதா அரசு நிறைவேற்றி இருக்கிறது இது ஒரு எதேச்சதிகாரமான போக்கு ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் ஒரு மிகப்பெரிய ஜனநாயக படுகொலை, ஒரே நாடு ஒரே நேரத்தில் தேர்தல் என்கிற முழக்கம் மிகவும் ஆபத்தானது அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் ஆனால் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் அது நடக்கும் என்றால் மாநில அளவிலான பிரச்சினைகள் அல்லது தேசிய அளவிலான பிரச்சினை எதுவாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஐந்தாண்டு காலத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் ஐந்தாண்டுகளுக்கு தொடர வேண்டும் என்பது தான் அந்த நோக்கம்,இடையிலேயே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவருதோ அல்லது ஆட்சியை மாற்ற தீர்மானிப்பதும் கூடாது நல்ல அரசாக இருந்தாலும் அல்லது ஊழல் அரசாக இருந்தாலும் மக்கள் விரோத அரசாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாண்டு காலத்திற்கு அந்த அரசுக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்படுகின்ற ஒரு தேர்தல் முறை ஒரே நேரத்தில் தேர்தல் என்கிற முடிவு எதேச்சதிகாரப் போக்கு வழக்கும் இது ஜனநாயகத்தை சிதைக்கும் எனவே இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது ,புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் ஒரு கலாச்சாரத்தின் தினிப்பு பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சிலேயே தினிப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது, மாநில அரசுக்கான அதிகாரப் பட்டியலில் கல்வி இல்லாததால் பொதுப்பட்டியலில் இருப்பதை பயன்படுத்தி கொண்டு மத்திய அரசு தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது இது மிகவும் ஆபத்தானது என்று கல்வி வல்லுனர்கள் கல்வியாளர்கள் கூறுகின்றனர் எனவே விரைவில் அதை எதிர்த்து நாடு முழுவதும் தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த இருக்கிறோம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திரா கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இந்த தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.