ETV Bharat / state

வீட்டைச்சூறையாடிய கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் புகார்!

நாகை: வீட்டைச்சூறையாடிய தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தனது இரண்டு மகன்களுடன் பெண் ஒருவர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

The woman give pettition to get divorce from her Rowdy husband
author img

By

Published : Nov 8, 2019, 9:02 PM IST

நாகை மாவட்டம், ஆக்கூர் அடுத்துள்ள தென்றல் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சி. இவருக்கும் அரியலூர் மாவட்டம், குல மாணிக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்த ஜான்சிக்கு தனது கணவர் பாஸ்கர் ரவுடி என்பதும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் பின் நாட்களில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஜான்சி தனது கணவர் பாஸ்கரிடம் கேட்டபோது அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து பாஸ்கரைத் தேடி வீட்டிற்கு காவலர்கள் அடிக்கடி வந்ததால், மனமுடைந்த ஜான்சி விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார். இதனையடுத்து கணவர் பாஸ்கர் அடியாட்களுடன் சென்று, ஜான்சியின் வீட்டை அடித்து நொறுக்கி, அப்பெண்மணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் புகார்

பின்னர், இதுகுறித்து செம்பனார் கோயில் காவல் நிலையத்தில் ஜான்சி புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து, தனது இரண்டு குழந்தைகளுடன் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் இன்று அவரது கணவர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க: காவிரியை தூய்மைப்படுத்த வலியுறுத்தி பாதயாத்திரை

Intro:கணவர் ரவுடி என தெரிந்ததும் விவாகரத்து கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் ; இரண்டு குழந்தைகளுடன் கணவர் மீது நாகை எஸ்பி அலுவலகத்தில் மனைவி புகார்.Body:கணவர் ரவுடி என தெரிந்ததும் விவாகரத்து கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் ; இரண்டு குழந்தைகளுடன் கணவர் மீது நாகை எஸ்பி அலுவலகத்தில் மனைவி புகார்.

நாகை மாவட்டம், ஆக்கூர் அடுத்துள்ள தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சி. இவருக்கும் அரியலூர் மாவட்டம், குல மாணிக்கம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் நடந்துள்ளது. இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்த ஜான்சிக்கு தனது கணவர் பாஸ்கர் ரவுடி என்பதும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜான்சி தனது கணவர் பாஸ்கரி டம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து பாஸ்கரை தேடி வீட்டிற்கு காவலர்கள் அடிக்கடி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஜான்சி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இது தெரிந்த கணவர் பாஸ்கர் அடியாட்களுடன் வந்து ஜான்சியின் வீட்டை அடித்து நொறுக்கி ஜான்சிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து செம்பனார் கோவில் காவல் நிலையத்தில் ஜான்சி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தனது இரண்டு குழந்தைகளுடன் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் கணவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.