ETV Bharat / state

கெயில் குழாய் பதிக்கும் பணி; 4ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்!

நாகை :  கெயில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிராக 4ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
author img

By

Published : May 18, 2019, 3:56 PM IST

நாகை மாவட்டம் மாதானம் மேமாத்தூர் வரை 29 கிலோமீட்டர் தூரம் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுவருகிறது. அப்பகுதி கிராமங்களில் நடவு செய்யப்பட்ட பயிர்களை அப்புறப்படுத்திவிட்டு காவல்துறையினரின் துணையுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் எந்த அறிவிப்பும் இன்றி குறுவை சாகுபடி செய்த நிலங்களில் குழாய் பதிப்பதற்கு இன்று ஏற்பாடுகள் செய்யபட்டன. இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் தற்காலிகமாக குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

எரிவாயு குழாய் பதிக்கும் பணி 4வது நாளாக விவசாயிகள் கடும் எதிர்ப்பு

இதையடுத்து , போராட்டத்தில் ஈடுபட்ட நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இரணியன், விஷ்ணுகுமார், பாலன் மற்றும் விவசாயிகள் உட்பட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Intro:புனிதரின் மயிலாடுதுறை அருகே விவசாய நிலங்களில் கெயில் குழாய் பதிக்கும் பணி. 4வது நாளாக நாளாக விவசாயிகள் போராட்டம் குழாய் பதிக்கும் பணிகளை தடுத்ததாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு:-

Body:நாகை மாவட்டம் மாதானம் மேமாத்தூர் வரை 29 கிலோமீட்டர் தூரம் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் காலகஸ்தி நாதபுரம் முடிகண்டநல்லூர் உட்பட பல கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை நாசப்படுத்தி குழாய் பதிப்பதற்கு விவசாயிகள் நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி இன்றும் கெயில் நிறுவனம் குறுவை சாகுபடி செய்த நிலங்களி குழாய் படிக்கப் போகிறோம் என்று முன்கூட்டியே விவசாயிகளுக்கு அதிகாரிகள் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை அதனால் நடவு செய்த வயலில் குழாய் பதிக்க அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர் இந்த போராட்டத்தால் தற்காலிகமாக குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் நிறுத்தியுள்ளது போராட்டத்தில் ஈடுபட்ட நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இரணியன், விஷ்ணுகுமார், பாலன் மற்றும் விவசாயிகள் மோகன்தாஸ், செல்வராஜ், சிவானந்தம், ராமசாமி, தென்னரசு ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பேட்டி : பாலன் விவசாயி முடிகண்டநல்லூர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.