ETV Bharat / state

திருமணத்திற்கு வந்த மொய்ப்பணத்தை காப்பகத்துக்கு வழங்கிய குடும்பம்!

author img

By

Published : Jul 2, 2022, 9:08 PM IST

Updated : Jul 3, 2022, 3:14 PM IST

மயிலாடுதுறையில் மகனின் திருமணத்திற்கு வந்தவர்கள் வைத்த மொய்ப் பணத்தை மாற்றுத்திறனாளிகள், முதியோர் காப்பகத்துக்கு வழங்கிய ஓய்வுபெற்ற நூலகரின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

திருமணத்திற்கு வந்த மொய் பணத்தை காப்பகத்துக்கு வழங்கிய குடும்பம்

மயிலாடுதுறை: இந்தியாவில் காலம் காலமாக வரதட்சணை வழங்கும் பழக்கவழக்கம் இருந்து கொண்டு வருகிறது. மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்குத் திருமணத்திற்காக பணம், நகை என்று வரதட்சணை கொடுப்பார்கள். ஆனால், தற்போது வரதட்சணை உச்சத்திற்கு சென்று வரதட்சணை தரவில்லை என்றால் மணப்பெண்ணை மணமகன் வீட்டார் கொடுமை செய்யும் சம்பவங்கள் எல்லாம் நடந்து கொண்டு வருகிறது.

இதனால் இளைஞர்கள் மத்தியில் வரதட்சணை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த பல இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை திருவிழந்தூர் தென்னமரச்சாலையில் வசிப்பவர், ஓய்வுபெற்ற நூலகர் ஜெயக்குமார். இவரது மகன் சம்பத் குமாருக்கும், காந்திமதி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் 9ஆம் தேதி மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமண அழைப்பிதழிலேயே, அன்பளிப்பைத் தவிர்த்து, அதனை ஏழை, எளிய மக்களுக்கு நலஉதவிகள் செய்திடுங்கள் என ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தது அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து திருமண அழைப்பிதழையும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி திருமண விழாவிற்கு அழைத்திருந்தனர். இருப்பினும், அன்பின் காரணமாக மொய் அளித்தவர்களை மறுக்க முடியாததால், திருமண மண்டபத்திலேயே 'ஏழை, எளியோர் முதியோர் நலத்திட்ட நிதி' என்ற வாசகத்துடன் உண்டியல் ஒன்றை வைத்து, மொய்ப் பணத்தை அந்த உண்டியலில் செலுத்த கேட்டுக்கொண்டனர்.

அந்த வகையில் திருமணத்தில் வசூலான 83ஆயிரம் ரூபாய் பணத்துடன், மேலும் சிறிது தொகையை சேர்த்து ஒரு லட்சம் ரூபாயை மயிலாடுதுறையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் காப்பகம், முதியோர் காப்பகம் மற்றும் வயதான ஏழை மக்கள் ஆகியோருக்கு அவர் ஜூலை 2இல் பிரித்து வழங்கினார்.

திருமணத்திற்கு வந்த மொய்ப்பணத்தை காப்பகத்துக்கு வழங்கிய குடும்பம்

மகனின் திருமணத்துக்கு பெண் வீட்டாரிடமும் வரதட்சணை பெற்றுக்கொள்ளாத நூலகர் ஜெயக்குமார் குடும்பத்தினர், திருமணத்திற்கு மொய்ப்பணமாக வந்த தொகையினையும் சமூக சேவை அமைப்புகளுக்கு வழங்கிய செயல் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

மேலும், இதைப் பார்த்து பல ஆதரவற்றோருக்கு உதவ முன்வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று ஜெயக்குமார் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: நெல்லை கோயில் யானைக்கு ரூ.12ஆயிரம் மதிப்பில் செருப்புகள் பரிசளித்த பக்தர்கள் - தமிழ்நாட்டிலேயே முதல்முறை!

Last Updated : Jul 3, 2022, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.