மயிலாடுதுறை: ஆந்திராவைத் தலைமை இடமாக கொண்ட அஹோபில மடத்தின் மடாதிபதி ஜியர் சுவாமிகள் அழகிய சிங்கர், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருநாங்கூரில் அஹோபில கிளை மடத்தில் சதுர் மாசிய விரதம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று அவரிடம் ஆசி பெறுவதற்காக டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், ஹெலிகாப்டர் மூலம் திருநாங்கூருக்கு வருகை தந்தார். தொடர்ந்து மடத்தில் எழுந்தருளியுள்ள நரசிம்மர் பெருமாள் சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தரிசனம் செய்தார்.
தொடர்ந்து அஹோபில ஜியரிடம் ஆசி பெற்றார். அவருக்கு மடத்தின் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டுச்சென்றார். திருநாங்கூர் பகுதிக்கு வந்த ஹெலிகாப்டரை அப்பகுதியினைச்சேர்ந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
திருவெண்காடு காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க:பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு