ETV Bharat / state

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது - என்.ஐ.ஏ - என் ஐ ஏ

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கில், சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ) கைப்பற்றியுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது- என்.ஐ.ஏ

author img

By

Published : Jun 9, 2022, 10:24 PM IST

Updated : Jun 9, 2022, 11:10 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா (38). இவரது கூட்டாளிகள் ஜஹபர் அலி (58), கோவையைச் சேர்ந்த முகமது ஆஷிக் (29), காரைக்காலைச் சேர்ந்த முகமது இர்பான் (22), சென்னையைச் சேர்ந்த அயனாவரம் ரஹ்மத் (29) ஆகியோர் ஆவர்.

கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே காரில் வந்த 5 பேரையும் காவல் துறையினர் மடக்கி விசாரித்தபோது துப்பாக்கியைக்காட்டி மிரட்டியுள்ளனர். இதையடுத்து போலீசார் ஏர் பிஸ்டல் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து 5 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

சாதிக் பாட்சா, கிளாஃபா பார்ட்டி ஆஃப் இந்தியா, கிளாஃபா ப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஐஎஸ்ஐ (Intellectual students of India) ஆகிய அமைப்புகளை தொடங்கி, பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்து விசாரிக்கத் தொடங்கியது. அதனடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் மயிலாடுதுறையில் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்தது.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சென்னை உட்பட ஒன்பது இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னையில் மண்ணடியிலும், அண்ணா சாலையில் உள்ள பழைய வணிக வளாகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அண்ணாசாலையில் பழைய வணிக வளாகத்தில் சாதிக் பாட்சா அலுவலகம் ஒன்றை நடத்தி வந்ததன் அடிப்படையில் அங்குள்ள கொடிகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த அலுவலகத்திற்கு சீல் வைத்துச் சென்றுள்ளனர்.

பயங்கரவாத அமைப்பு

குறிப்பாக முக்கியமாக குற்றம் சாட்டப்படும் சாதிக்பாட்சா மக்கள் நீதி பாசறை என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்து தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த மக்கள் நீதி பாசறை தற்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. icama என்ற தற்காப்பு கலை அகாடமி நடத்தி வந்ததாகவும், அதன் மூலம் பலருக்கும் தற்காப்பு கலை கற்க வந்தவர்களை ISIS தீவிரவாத அமைப்பில் சேர்ப்பதற்கு உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் சாதிக் பாட்ஷாவை ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மிரட்டிய விவகாரம் தொடர்பாக, ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் மத்திய உளவுத்துறை அமைப்பால் தீவிரமாக கண்காணிக்கப்படும் 72 பேர் பட்டியலில் சாதிக் பாட்ஷாவையும் தீவிரமாக அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் சாதிக்பாட்சா மீது பெரியமேடு, ஆயிரம் விளக்கு, வடக்கு கடற்கரை காவல் நிலையம் என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்பான 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் 68 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தது.

ஏற்கெனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பாக தீவிரமாக மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அந்த அமைப்பு தொடர்புடைய உறுப்பினர் ஆன சாதிக்பாட்சா வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தீவிர சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் 5 இடங்களில் நடைபெற்று வந்த என்ஐஏ சோதனை நிறைவு!

Last Updated : Jun 9, 2022, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.