மயிலாடுதுறை: சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் 3 பேருடன் சேர்ந்த பூம்புகார் நோக்கி மின் பிடிக்கச் சென்றுள்ளார். பாஸ்கரின் படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நான்கு பேரும் கடலில் விழுந்து தத்தளித்த நிலையில், அவர்களை மிட்ட சக மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். மேலும் கடலில் கவிழ்ந்த விசைப்படகை சக மீனவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. விபத்தில் சிக்கிய படகின் மதிப்பு ரூ.20 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரோடு கொம்பு தூக்கி அம்மன் கோயில் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம்!