கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 24ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் ஓட்டல்கள், டீ கடைகள் அனைத்தும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகரில் காலை, மதிய உணவு என்றால் அரசு மருத்துவமனை அருகே இயங்கும் அம்மா உணவகத்தை விட்டால் பொதுமக்களுக்கு வேறுவழி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்மா உணவகத்தில் காலை மற்றும் மதிய உணவுகள் உரிய நேரத்தில் சுகாதாரமாகவும், தரமானதாகவும் தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா என்று மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மதிய வேலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை தயார் நிலையில் இருந்தன.
உணவுக் கூடங்களை பார்வையிட்ட எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு வழங்க இருந்த உணவை அருந்தினார். அவை தரமாகவும், சுவையாகவும் இருக்கின்றனவா என்பதை ருசித்துப் பார்த்து சமைப்பவர்களிடம் குறைகளை எடுத்துரைத்தார்.
இதனைத்தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்தில் இயங்கும் காய்கறி சந்தை மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு செய்தார். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருள்களை வாங்க அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: ஆய்வை முடித்து விட்டு அம்மா உணவகத்தில் உணவருந்திய ஓபிஎஸ்!