நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம், அவரின் காவல் நிலையத்திற்குள்பட்ட அத்தியாவசிய பொருள்களை விற்பனைசெய்யும் மளிகை, காய்கறிக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்க கையூட்டுப் பெறுவதாக ஏப்ரல் 20ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்துக்கு புகார்கள் வந்தன.
அதனால் அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் ஆயுதப்படைக்குப் பணிக்கு செல்லாமல் தனக்கு நெஞ்சுவலி என நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அதனால் அவர் மீது வந்த புகார்களின் அடிப்படையில் அவரைப் பணியிடை நீக்கம்செய்ய காவல்துறைக் கண்காணிப்பாளர் உயர் அலுவலர்களுக்குப் பரிந்துரைசெய்தார். அதன்படி, தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசத்தை கையூட்டுப் புகார்களின் அடிப்படையில், தற்காலிக பணியிடை நீக்கம்செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்புக் காவலர்கள் கைது செய்த அலுவலர் உயிரிழப்பு!