நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோவிலின் குளமானது பல ஆண்டுகளுக்கு தூர்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர்கள் பல முறை முதலமைச்சரின் தனி பிரிவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது கிராம ஊராட்சி சார்பில் அக்குளம் தூர்வாரப்பட்டு வருகிறது. இருப்பினும் அலுவலர்கள் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமப்புகளை அகற்றாமலும் குளத்தில் பெயரளவில் மட்டும் குப்பைகளை சுத்தம் செய்தும் வருகின்றனர்.
குளத்தை சுத்தம் செய்ய நீண்ட நாள்களாக அரசுக்கு சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்தும், வெறும் பெயரளவில் மட்டுமே கிராம ஊராட்சி சுத்தம் செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: தூர்வாரப்படாத வாய்க்கால்கள்: வேதனையில் விவசாயிகள்