மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, கழனிவாசல் கிராமத்தில் செல்வவிநாயகர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலானது புதிதாகப் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்று நான்காண்டுகள் ஆகின்றன.
இந்நிலையில் இன்று (டிச. 10) காலை கோயிலுக்குச் சென்றவர்கள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு, கோயில் திறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கோயினுள் சென்றனர். அப்போது கோயிலின் உள்ளே இருந்த 2 அடி உயரமுள்ள சில்வர் உண்டியலை அடையாளம் தெரியாதோர் திருடிச் சென்றதோடு, அதனுள் இருந்த பணத்தை எடுத்துவிட்டு, உண்டியலை கடலாழி ஆற்றங்கரையோரம் வீசி சென்றது தெரியவந்தது.
மேலும் அந்த உண்டியலானது திறக்கப்பட்டு ஓராண்டாகியிருப்பதால், அதில் சுமார் 15 ஆயிரம் ரூபாய் இருக்கக்கூடும் என்று கோயில் நிர்வாகம் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. தற்போது இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: செல்போன் கடையின் பூட்டை உடைத்து 32 ஆயிரம் ரூபாய் கொள்ளை!