ETV Bharat / state

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை - காவல்துறை விசாரணை! - நாகை மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டத்தையடுத்து, வரதட்சணை கொடுமையா என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Teen commits suicide within 6 months of marriage - Police investigation!

author img

By

Published : Sep 29, 2020, 5:02 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள நல்லூரை சேர்ந்த தேநீர் கடை உரிமையாளர் ராஜேஷ் (28). இவருக்கும் ஆயங்குடிபள்ளம் பகுதியை சேர்ந்த ரஞ்சிதா (25) என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று ரஞ்சிதாவின் கணவர், மாமியார் சொந்த வேலையாக வெளியே சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, ராஜேஷ் பலமுறை கதவை தட்டியுள்ளார்.

இருப்பினும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரஞ்சிதா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து ரஞ்சிதாவின் சகோதரர் வீரமணி, திருமணமாகி ஆறு மாத்தில் எனது தங்கை தற்கொலை செய்துள்ளதால் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

இதையும் படிங்க:பார்சல் சர்வீஸ் மூலம் கடத்தல் - 20 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.