நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாகை மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, 'தமிழகத்தில் 14 வகையான நெகிழி பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனை ஒழுங்குபடுத்தாமல் வியாபாரிகள் மீது அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலை நீடிக்கும் என்றால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
குளிர்பான நிறுவனங்களுக்குத் தடைக்கோரி வணிகர் சங்கம் போராட்டம் - Tamilnadu traders federation
நாகை: நெகிழி பொருட்கள் மீதான தடையை ஒழுங்குபடுத்துதல், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனங்களுக்குத் தடை விதித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாகை மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, 'தமிழகத்தில் 14 வகையான நெகிழி பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனை ஒழுங்குபடுத்தாமல் வியாபாரிகள் மீது அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலை நீடிக்கும் என்றால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
Body:பல்வேறு பிரச்சினைகளுக்கு போராட்டம் நடத்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு முடிவு.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நாகை மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது.
வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறிய பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும், அதனை ஒழுங்குமுறை படுத்தாமல் வியாபாரிகள் மீது அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது எனவும், இந்த நிலை நீடிக்கும் என்றால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியவர், அதேபோல் தற்போது தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகின்ற சூழலில், அன்னிய குளிர்பான நிறுவனங்கள் ஆழ்துளை கிணறுகள் மூலம் பல லட்சக்கணக்கான தண்ணீரை நிலத்திலிருந்து உறிஞ்சி எடுப்பதாகவும், அதனை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு தடை செய்யாத பட்சத்தில் குளிர்பான நிறுவனங்கள் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ள இடங்களில் தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும்.
மேலும் ,ஆன்லைன் சில்லறை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களை அனுமதித்தால் இந்தியாவிலுள்ள 21 கோடி வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதையும் மீறி சில்லறை ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு அனுமதித்தால் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர் இவ்விஷயத்தில் தமிழக அரசு வணிகர்களுக்கு ஆதரவாக இருக்கும் என தான் நம்புவதாகவும் கூறினார்.
Conclusion: