ETV Bharat / state

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி:  திருவாரூர், கன்னியாகுமரி அணிகள் சாம்பியன்! - winner

நாகை: மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான சப் ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் ஆடவர் பிரிவில் திருவாரூர் அணியும், பெண்கள் பிரிவில் கன்னியாகுமரி அணியும் கோப்பையை தட்டிச்சென்றது.

state level cricket
author img

By

Published : Aug 12, 2019, 8:41 PM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த சித்தர்காட்டில், உள்ள தனியார் பள்ளியில், மாவட்ட கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் கழகம் சார்பில், மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான சப் ஜூனியர் கிரிக்கெட் போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கின.

இதில் 14வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான போட்டியில் நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை, விழுப்புரம், கோயமுத்தூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, நாமக்கல், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆடவர் பிரிவில் 14அணிகளும், மகளிர் பிரிவில் 5அணிகளும் பங்கேற்றன.

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

8 ஓவர்களை கொண்ட இந்த போட்டிகள், நாக் அவுட் மற்றும் லீக் சுற்றுகளாக நடைபெற்றன. பல அணிகளை பின்னுக்கு தள்ளி இறுதி ஆட்டத்தில் திருவாரூர் அணியும், கன்னியாகுமரி அணியும் மோதிக்கொண்டன. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கன்னியாகுமரி அணியை, 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருவாரூர் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது. அதேபோல் பெண்கள் பிரிவில் திருவண்ணாமலை அணியை வீழ்த்தி கன்னியாகுமரி அணி கோப்பையை வென்றது.

இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகள் தேர்தெடுக்கப்பட்டு நவம்பர் மாதம், மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கான தமிழ்நாடு அணியில் இடம் பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு மயிலாடுதுறை காவல்துறை டி.எஸ்.பி வெள்ளதுரை பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Intro:மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான சப் ஜீனியர் மாணவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தின் ஆடவர் பிரிவில் திருவாரூர் அணி முதலிடத்தையும், கன்னியாகுமரி அணி இரண்டாமிடம் பிடித்தன:-
Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காட்டில், உள்ள தனியார் பள்ளியில், மாவட்ட கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் கழகம் சார்பில், மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான சப் ஜீனியர் கிரிக்கெட் போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கின. இதில் 14வயதிற்கு உட்பட்டமாணவர், மற்றும் மாணவிகளுக்கான போட்டிகள் தனித்தனியே நடைபெற்றன. மாநிலம்; முழுவதும் நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை, விழுப்புரம், கோயமுத்தூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, நாமக்கல், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடவர் போட்டியில் 14அணிகளும், மகளிர் போட்டியில் 5அணிகளும் பங்கேற்று விளையாடின. 8 ஓவர்கள் கொண்ட போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் போட்டிகளாக நடைபெற்றன. பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கன்னியாகுமரி அணியை எதிர்த்து விளையாடிய திருவாரூர் அணி 4 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில், கன்னியாகுமரி அணி முதலிடத்தையும், திருவண்ணாமலை அணி இரண்டாமிடத்தையும் பிடித்தது. இப்போட்டிகளில் சிறந்த முறையில் விளையாடிய வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, நவம்பர் மாதம் இந்தூரில் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கான தமிழக அணியில் இடம் பெறுவர். வெற்றி பெற்ற அணிகளுக்கு மயிலாடுதுறை காவல்துறை டி.எஸ்.பி வெள்ளதுரை பரிசுகள் வழங்கி பாராட்டினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.