ETV Bharat / state

புனித சவேரியார் ஆலய ஆண்டுத் திருவிழா தொடக்கம்! - புனித சவேரியார் ஆலய ஆண்டுத் திருவிழா

மயிலாடுதுறை: புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (நவ.23) தொடங்கியது. இத்திருவிழா டிசம்பர் 3ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் நிறைவு பெறும்.

புனித சவேரியார் ஆலய ஆண்டுத் திருவிழா
புனித சவேரியார் ஆலய ஆண்டுத் திருவிழா
author img

By

Published : Nov 24, 2020, 7:03 AM IST

Updated : Nov 24, 2020, 8:38 AM IST

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஆலய வளாகத்தில் மறைமாவட்ட முதன்மைகுரு பங்குத்தந்தை பேரருட்திரு.ஆரோக்கியதாஸ் அடிகளார் தலைமையில் கொடியுடன் பவனி நடைபெற்றது. பவனியை உதவி பங்குத்தந்தை அருட்திரு.கஸ்மீர்ராஜ் வழிநடத்தினார்.

ஆதிச்சபுரம் பங்குத்தந்தை அருட்திரு.மரியசூசை அடிகளார் புனித சவேரியார் திருஉருவக்கொடியை புனிதம் செய்தார். வாணவேடிக்கை விண்ணை அதிரச் செய்ய இன்னிசையுடன் ஆலய வளாகத்தில் கொடியேற்றப்பட்டது.

அதன் பின்னர், ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.“துணிவோடு இருங்கள் நான்தான் அஞ்சாதீர்கள்” என்ற திருவசனத்தை மையமாக வைத்து நடைபெற்ற திருப்பலியில், உலக அமைதிக்காகவும், கரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திடவும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன.

கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கிய ஆண்டு திருவிழா தொடர்ந்து பத்து நாள்கள் நடைபெறவுள்ளது. தினசரி மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன. வரும் டிசம்பர் 2ஆம் தேதி இரவு, திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து தேர்பவனியும் நடைபெறும். டிசம்பர் 3ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

புனித சவேரியார் ஆலய ஆண்டுத் திருவிழா தொடக்கம்

கொடியேற்ற விழா, திருப்பலி நிகழ்வுகளில் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பலிபீடச் சிறுவர்கள், அவ்வூர் மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:கருப்பர் கூட்டத்தை காவி கூட்டம் விரட்டும்: எல்.முருகன்

Last Updated : Nov 24, 2020, 8:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.