மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதர் கோயிலில் அபயாம்பாள் என்ற 50 வயதுடைய யானை 49 ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மாட்டுபொங்கல் நாளன்று யானை அபயாம்பாள் தமிழ்நாடு அரசின் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்தாண்டு யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்படாத நிலையில் கோயில் வளாகத்தில் அபயாம்பாள் யானை, பசு மற்றும் காளைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
கோயில் அர்ச்சகர்கள் யானை, பசு மற்றும் காளைகளுக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர் மற்றும் பஞ்ச திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டினர்.
இதில் கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு பரிசு வழங்குவதில் அரசியல் - பாலமேட்டில் 2ஆவது பரிசு பெற்றவர் குற்றச்சாட்டு