நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (மார்ச்.17) அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகப்பட்டினத்தில் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது மக்களிடையே அவர் பேசியதாவது: "உலகம் மிகப்பெரிய உணவு பஞ்சத்தை எதிர்கொள்ளப் போகிறது. அதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஊழல், லஞ்சம் ஆகியவை தேசியமயமாக்கப்பட்டுவிட்டது.
தமிழ்நாடு அரசு நிதியை மட்டுமே ஒதுக்குகிறது, நலத்திட்டங்களில் எவ்வித பணியையும் செய்யவில்லை. வீட்டிற்கு ஒரு வாஷிங் மெஷின் இலவசமாக வழங்குவது சாத்தியமில்லை. தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே ஆறு லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு கோடியே 18 லட்சம் குடும்ப அட்டைதார்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் ரூபாய் மதிப்புள்ள வாஷிங்மெஷின் எவ்வாறு வழங்க முடியும்?
திமுக ஆயிரம் ரூபாய் அறிவித்தது. அதையொட்டி, அதிமுக ஆயிரத்து 500 ரூபாய் அறிவிக்கிறது. இவர்கள் மக்களை போர்வை மாதிரி ஏலம் எடுப்பது போல இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க:'கமல் ஒரு அரை வேக்காடு' - செந்தில் பாலாஜி தாக்கு