நாகப்பட்டினம் மயிலாடுதுறையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை சாலை ஓரங்களில் இருந்த ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன.
இதையடுத்து, வெட்டப்பட்ட மரங்கள் இருந்த இடத்திலும், புதிய இடங்களில் பத்தாயிரம் மரங்களை நட்டு வளர்க்க அரண் என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதன் முதற்கட்டமாக தரங்கம்பாடி தாலுகா இளையாளூர் ஊராட்சியில் வேம்பு, தேக்கு, புங்கன் உள்ளிட்ட 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. வன ஆர்வலர் முகமது அர்ஷத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி வளர்த்து மரமாகும் பொறுப்பினை அந்தந்தப் பகுதி வீட்டு உரிமையாளர்களே ஆர்வத்துடன் ஏற்று செய்வதாக உறுதியளித்துள்ளனர்.