ETV Bharat / state

ஊத்தாப்பம் கேட்டு கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்!

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் உணவகம் ஒன்றில் இளைஞர்கள் சிலர் ஊத்தப்பம் கேட்டு கத்தியுடன் உணவக ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் செய்திகள்  ஊத்தப்பம் கேட்டு பிரச்னை  nagapattinam lattest news  nagapattinam news in tamil
நாகை: ஊத்தாப்பம் கேட்டு கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்
author img

By

Published : Aug 19, 2020, 5:02 PM IST

மயிலாடுதுறை ஸ்டேட் பேங்க் சாலையில் வில்லேஜ் ரெஸ்டாரன்ட் என்ற உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் நேற்றிரவு சாப்பிட வந்த ஆறு இளைஞர்கள் ஊத்தாப்பம் கேட்டுள்ளனர். ஊத்தாப்பம் இல்லை என்று உணவக ஊழியர்கள் கூறியதால், மதுபோதையில் இருந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து உணவக ஊழியர்களைத் தாக்கி அவர்களை கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளனர். இந்நிகழ்வு உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து உணவக உரிமையாளர் முகமது அசரத், சிசிடிவியுடன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நாகை: ஊத்தாப்பம் கேட்டு கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்

மயிலாடுதுறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மாப்படுகை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கருப்பையன் என்பவரின் மகன் பிரதாப், அவரது நண்பர்கள் ஆறு பேருடன் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ரீசார்ஜ் பண்ண வந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.