ETV Bharat / state

'தெருக்கூத்துகளில் பாடும் ஜால்ராக்களைப் போல ஈபிஎஸ், ஓபிஎஸ்' - சீதாராம் யெச்சூரி - Sitaram Yechury Election Campaign In Nagapatinam

நாகப்பட்டினம்: தெருக்கூத்துகளில் பின்பாட்டு பாடும் ஜால்ராக்களைப் போல முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் மத்திய அரசுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர் என்று சீதாராம் யெச்சூரி சாடியுள்ளார்.

Sitaram Yechury Speech  Sitaram Yechury Speech In Nagapatinam  Sitaram Yechury Election Campaign  சீதாராம் யெச்சூரி தேர்தல் பரப்புரை  சீதாராம் யெச்சூரி பேச்சு  சீதாராம் யெச்சூரி  Sitaram Yechury Election Campaign In Nagapatinam  நாகப்பட்டினத்தில் சீதாராம் யெச்சூரி தேர்தல் பரப்புரை
Sitaram Yechury Election Campaign In Nagapatinam
author img

By

Published : Mar 30, 2021, 7:53 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அக்கட்சியின் கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் நாகை மாலியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 42 பேர் உயிர் துறந்து தியாகம் செய்த நிகழ்வை அறிவோம். டெல்லியில் விவசாயத்திற்கும் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் எதிரான சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இதுவரையில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரை நீத்துள்ளனர்.

ஆனால், பாஜக அரசு விவசாயிகளை குறித்து எந்தக் கவலையும் கொள்ளவில்லை. ரயில்வே, கல்லூரிகள், மருத்துவமனைகள், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. இதனால் வரும் இளைய தலைமுறையினர் பெரும் பாதிப்பை அடைவார்கள்.

தெருக்கூத்துகளில் பின்பாட்டு பாடும் ஜால்ராக்களைப் போல பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பிரதமர் மோடிக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், தமிழ்நாட்டிற்கு எந்த முன்னேற்றமும் கிடைக்கப்போவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் 'லவ் ஜிகாத்' சட்டம் அமல்படுத்தப்பட்டு மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன.

பொதுக்கூட்டத்தில் பேசும் சீதாராம் யெச்சூரி

இந்நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்படாமல் தடுக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார். முன்னதாக திருக்குவளையில் உள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இல்லத்திற்குச் சென்று அங்கு உள்ள நூலகம் மற்றும் திருவுருவப் படங்களை அவர் பார்வையிட்டார்.

இதையும் படிங்க: ’மோடியின் பக்கபலமாக செயல்படும் இபிஎஸ் ஓபிஎஸ்' - சீதாராம் யெச்சூரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.