ETV Bharat / state

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் பாலஸ்தாபனம் - மயிலாடுதுறை சீர்காழி

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் பாலஸ்தாபனம் தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் பாலஸ்தாபனம்

author img

By

Published : Aug 26, 2022, 7:45 AM IST

மயிலாடுதுறை: சீர்காழி பிடாரி வடக்கு வீதி கீழ் திசையில் சட்டைநாதர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் உள்ளது. இக்கோவிலில் மூலவர் பதினெண் புராணேஸ்வரர் உடையார் ஆகவும், சௌந்தரநாயகி அம்மன் காட்சி தருகின்றனர்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் மிகவும் சிதிலமடைந்துள்ளது. இக்கோவிலுக்கு திருப்பணிகள் தொடங்கி குடமுழுக்கு நடத்த தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஏற்பாட்டின் படி நேற்று பாலஸ்தாபனம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு ஹோமம் பூஜைகள் செய்து கோயில் திருப்பணிகளை அடிக்கல் நாட்டி தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் பாலஸ்தாபனம்

இதில் திருப்பணி குழுவினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பதினெண் புராணங்களை ஒன்றிணைக்கும் போது இக்கோவில் மூலவர் சிவபெருமான் புராணங்களை ஒன்றிணைக்கும் தலைவராக உடையவர் இருந்ததாக கோயில் வரலாறு கூறுகிறது. கோவில் குடமுழுக்கு நடைபெற்று சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கட்டடத்திற்குச்சீல்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.