நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள திருச்செங்காட்டாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் மணிபாரதி (27). இவர் கடந்த 2015ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிபாரதியை கைதுசெய்தனர். இது தொடர்பான வழக்கு நாகை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி தமிழரசி இன்று (ஏப்.28) தீர்ப்பளித்தார்.
இதில் மணிபாரதிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூபாய் 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து மணிபாரதி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அரசு எச்சரிக்கை