திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த தென்காசி, காஞ்சிபுரத்திலிருந்த செங்கல்பட்டு ஆகிய பகுதிகளை பிரித்து புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என கடந்த 18ஆம் தேதி முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பல ஆண்டுகளாக நாகை மாவட்டத்தில் இருந்து தங்களை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி மயிலாடுதுறை பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆனால் இதுவரை அதை செயல்படுத்தாதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக அந்தப் பகுதியில் மூன்றாயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.