நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள ஆயிரத்து 861 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் முன்னிலையில் வைப்பு அறை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேன், டாட்டா ஏசி உள்ளிட்ட வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேடு கருவிகள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளர்களுக்குத் தேவையான கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பொருள்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, அரக்கு, குண்டூசி உள்ளிட்ட 35 வகையான பொருள்கள் அனுப்பப்பட்டன.
தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு வாகனங்களுக்கும் இரண்டு காவல் துறையினர் வீதம் வாக்கு மையங்களுக்கு வாகனங்கள் புறப்பட்டன. நாகை மாவட்டத்திலுள்ள 144 பதற்றமான வாக்குச் சாவடிகளுக்குத் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் போடப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கும் பணி தீவிரம்!