மயிலாடுதுறை மாவட்டம் திருவிளையாட்டம் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாகக் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருவிளையாட்டம் பாலம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த பாரதி என்பவரைப் பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர்.
அதில் அவர் அப்பகுதியில் உள்ள காலவாய் அருகில் சாராயத்தை மண்ணில் புதைத்துவைத்து விற்பனைசெய்தது தெரியவந்தது.
இதையடுத்து, மண்ணில் புதைத்துவைக்கப்பட்டிருந்த 800 பாக்கெட் சாராயம், 15 கேன்களில் இருந்த 750 லிட்டர் சாராயம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் பாரதியைக் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர் கைது