அனுமதியின்றி செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுகாக்களில் அனுமதியின்றி செயல்பட்ட ஐந்து குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் உள்ள ஆழ்குழாய்களுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
முதல்கட்டமாக மயிலாடுதுறையில் அமைந்துள்ள மூன்று மினரல் வாட்டர் கம்பெனிகளில் ஆழ்குழாய், தரங்கம்பாடி தாலுகாவிலுள்ள இரண்டு மினரல் வாட்டர் கம்பெனிகள் ஆழ்குழாய் போர்வல் இணைப்பு ஆகியவற்றிற்கு சீல் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் பிளேடால் பையை அறுத்து 11 சவரன் நகை கொள்ளை!