புதுச்சேரி மாநிலம், காரைக்கால் திருநள்ளாற்றில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வர் ஆலயம். இங்கு சனீஸ்வரன் பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனி பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு சனி பெயர்ச்சி விழா டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் சனி பகவான் பெயர்ச்சி அடைவதையடுத்து இன்று திருநள்ளாறு கோயிலில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, பந்தகாலுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்கள் பந்தக்காலை கோயிலை சுற்றி வலம் வந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, துணை ஆட்சியர் ஆதர்ஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:திருமண விழாவில் முதலமைச்சர் - மணமக்களுக்கு வாழ்த்து!