மயிலாடுதுறை: காவிரி கடைமடைப்பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழையில் தப்பி, நன்கு வளர்ந்து தண்டு உருளும் பருவத்தில் உள்ள சம்பா பயிர்களில் எலி தாக்குதல் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Farmers Issue
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "நாற்று நடவு செய்யத் தொடங்கியது முதல் தொடர்ந்து மழைபெய்து வருவதால் நிலங்களில் நீர் சூழ்ந்து பயிர் பாதிப்படைந்துள்ளது.
இந்த ஆண்டு குறுவை சாகுபடியின்போது எலிகள் தாக்குதல் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
40 முதல் 80 நாட்கள் ஆன பயிர்களை எலிகள் கடித்து நாசம் செய்கிறது.
சிலர் பொறிவைத்து எலிகளைப் பிடிக்கின்றனர். பெரும்பாலான இடங்களில் ஒரே நேரத்தில் எலி தாக்குதல் இருப்பதால் பொறிவைக்க ஆட்கள் கிடைப்பதில்லை.
இதனால் ஒருசில நாட்களிலேயே எலிகள் பயிர்களை நாசம் செய்கிறது. கடந்த ஆட்சிகாலத்தில் கோடைகாலத்தில் ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு முகாம்கள் வேளாண்மைத்துறை மூலம் நடத்தப்பட்டது.
அதேபோன்று, நடப்பு ஆண்டு கோடைகாலத்தில் எலி ஒழிப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். அப்படி செய்தால்தான் அடுத்த குறுவை சாகுபடியில் எலிகள் தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்ற முடியும்" என்று வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'பண மோசடி வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கவேண்டும்' - முத்தரசன்