மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை திமுக மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார்.
இதில் சிறப்புரையாற்றிய ஆர்.எஸ்.பாரதி, “அனைத்து மாநில கட்சிகளையும் தடை செய்ய டெல்லி முடிவெடுத்தபோது, இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் தங்கள் கட்சியின் பெயரை மாற்றிக் கொண்டது. அப்போது அதிமுக பெயரை ‘அஇஅதிமுக’ என எம்.ஜி.ஆர் மாற்றினார். ஆனால் அப்போதும் பெயரை மாற்றாமல் தொடர்ந்து இப்போது வரை செயல்பட்டு வரும் ஒரே கட்சி, திமுக மட்டுமே.
1992ஆம் மீண்டும் திமுகவுக்கு சோதனை வந்தது. அப்போது அன்பழகன் மட்டும் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஒரு கையெழுத்திட்டிருந்தால், இன்று திமுக என்ற கட்சியே இருந்திருக்காது. இப்படி எல்லா சூழ்நிலையிலும் கருணாநிதிடன் தோளோடு தோள் நின்று திமுகவை காப்பாற்றியவர் அன்பழகன்” என பேசினார்.
இதையும் படிங்க: மதவாதத்துக்குத்தான் எதிரிகளே தவிர, மதத்திற்கு அல்ல - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு