நாகை மாவட்டம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களும், கரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் ரோட்டரி இன்டர்நேஷனல் சார்பில் வழங்கப்பட்டது.
சுமார் ஐந்தரை லட்சம் மதிப்பிலான உபகரணங்களாக, 2 செயற்கை சுவாசக் கருவிகள், 6 செயற்கை சுவாச கருவிகளுக்கான முகக் கவசங்கள், 1,200 மூன்றடுக்கு முகக் கவசங்கள், 760 n95 முகக்கவசங்கள், 70 பாதுகாப்பு உடைகள் ஆகியன வழங்கப்பட்டன. இந்த உபகரணங்களை முன்னாள் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆர்.மகேந்திரனிடம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கினர். அப்போது, அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.