ETV Bharat / state

மதுபானக் கடையால் கரோனா பரவும் அபாயம்: கடையை மூடக்கோரி போராட்டம்!

நாகப்பட்டினம்: வேதாரண்யம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையால் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர்.

Risk of corona infection by tasmac shop: women struggle to close shop!

author img

By

Published : Jun 26, 2020, 10:23 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வேதாரண்யம் பகுதிகளிலும் கரோனா வைரஸ் தொற்று பெருகி வரும் நிலையில், உம்பளச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகளில் பெரும்பாலான மதுப்பிரியர்கள் தினம்தோறும் வந்து செல்கின்றனர்.

இதன் மூலம் கரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளதாகக் கூறி அக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் அரசு மதுபானக் கடை முன்பு திரண்டு, கடையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின் விளைவாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மதுபானக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.