ETV Bharat / state

தருமபுர ஆதீனத்தில் மனிதர்களை பல்லக்கில் தூக்கும் நிகழ்வு: தி.க-வினர் எதிர்ப்பால் தடை..! - திராவிடர் கழகம்

மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டணப் பிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்குவதற்கு அனுமதி மறுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தருமபுர ஆதீனத்தில் ’பட்டணப் பிரவேசம்’ : தி.க - வினர் எதிர்ப்பால் தடை..!

author img

By

Published : May 2, 2022, 6:34 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று ’பட்டினப் பிரவேசம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி, பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்தப் பட்டினப்பிரவேச பல்லக்குத்தூக்கும் நிகழ்வுக்கு திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

கடந்த ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப்பிரவேசம் நிகழ்வில் திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பல்லக்கில் அமர்த்தி வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேச நிகழ்வானது இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது.

விதிக்கப்பட்ட தடை: இந்நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீனக்கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்லத் தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

ஆதீனக்கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் தூக்கினால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால் மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்த ராஜ் இந்நிகழ்ச்சியைத் தடை செய்திட கேட்டு அனுப்பிய அறிக்கையின் படியும்; இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23இன் படி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதாலும் பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீனக்கர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்லத் தடை விதித்து கோட்டாட்சியர் பாலாஜி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: விக்னேஷ் மரண வழக்கு.. வெளியான புதிய ஆதாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.