நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி வட்டத்தைச் சேர்ந்த 86 பேர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் செங்கல் சூளையில் வேலை செய்துவந்தனர். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேலையிழந்து தவித்து வந்த இவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாட்ஸ்அப் செயலி மூலம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த மூன்று பேருந்துகள் மூலம் இவர்கள் அனைவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர். பின்னர், இவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மேலும், இவர்கள் அனைவரையும் மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கேரளா டூ நாமக்கல்: வனப்பகுதி வழியே சொந்த ஊர் செல்ல முயன்ற தொழிலாளர்கள் மீட்பு