மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கி.காசிராமன் இன்று (ஏப். 1) பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். மயிலாடுதுறையில் பர்மா காலனி, கீழநாஞ்சில்நாடு, கொத்தத்தெரு, கீழவீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது காவிரி ஆற்றிற்கு வந்த காசிராமன் நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஆற்றில் இறங்கி பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தினார். இது குறித்து காசிராமன் பேசுகையில், “காவிரியில் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. தமிழர்களின் மரபு பாதுகாக்கப்பட வேண்டுமானால் பிளாஸ்டிக் தொழிற்சாலையை அரசு தடை செய்ய வேண்டும்.
தனி மனிதன் மாற்றத்தால் மட்டுமே நீர் நிலைகளை பாதுகாக்க முடியும் என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்துவதற்காகவே காவிரியில் இறங்கி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினேன்” என்றார். பிளாஸ்டிக் கழிவுகளை வேட்பாளரின் செயல் பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : மீண்டும் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்கும் நடிகர் வடிவேலு!