ETV Bharat / state

கனமழை காரணமாக வைத்தீஸ்வரன், சட்டைநாதர் கோயில்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் பக்தர்கள் அவதி! - mayiladuthurai news

Mayiladuthurai Rain Affected: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோயில், சட்டைநாதர் கோயில்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.

கனமழை காரணமாக வைத்தீஸ்வரன், சட்டநாதர் கோயில்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் பக்தர்கள் அவதி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 2:24 PM IST

கனமழை காரணமாக வைத்தீஸ்வரன், சட்டநாதர் கோயில்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் பக்தர்கள் அவதி

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் அதி கனமழை பெய்த நிலையில், தற்போது ஜனவரி முதல் வாரத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த அதி கனமழையால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புகள் மோசமாக இருந்தது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் விழுப்புரம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட வடக்கு டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விழுப்பிரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற செவ்வாய் பரிகார ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக கோயிலின் உள்ளே தண்ணீர் புகுந்துள்ளது.

இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ள நிலையில், கோயிலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் சீர்காழியில் சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளியுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயில், சட்டைநாதர் கோயில்களிலும் கனமழை காரணமாக தண்ணீர் புகுந்துள்ளது.

இதனையடுத்து மழை நீரை வெளியேற்றும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு அதிகபட்சமாக சீர்காழியில் 22 செ.மீ மேல் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.