மயிலாடுதுறை: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் கமலா. இவர் கோவில்பட்டியில் நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்கு தனது குடும்பத்தினருடன்சென்றுவிட்டு நேற்றிரவு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பினார். தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் இறங்கியபோது தான் கொண்டு வந்திருந்த கைப்பையை எடுக்காமல் ரயிலிலேயே தவறவிட்டது தெரியவந்தது.
அதன்பின் அவர் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த ரயில் மயிலாடுதுறையை நோக்கி சென்று கொண்டிருப்பதை அறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் உடனடியாக மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் சுதிர்குமாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனடிப்படையில் உடனடியாக சுதிர்குமார் விரைந்து சென்று அந்த கைப்பையை மீட்டு மயிலாடுதுறை ரயில்வே நிலையத்திற்கு கொண்டு வந்தார். அதன்பின் அந்த கைப்பை கமலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் அவர் தவறவிட்டிருந்த 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.3,600 ரொக்க பணம் அப்படியே இருந்துள்ளது.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு - எம்பி சண்முகசுந்தரம் தகவல்