நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள ரயில்வே கிராஸிங் கேட்டில், ரயில்வே துறை சார்பாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிக்னல் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரயில்வே கிராஸிங் கேட்டை மூட முடியாமல் போகும் பட்சத்தில் விபத்து ஏற்படாத வண்ணம் எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை ஒத்திகை ரயில்வே துறை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, மாவட்ட காவல்துறை, ரயில்வே காவல்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு விபத்து ஏற்பட்டது போல் ஆம்புலன்ஸ், தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து வருவதற்கான கால அளவுகள் அறியப்பட்டு, விபத்து நேரத்தில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் அதனை எவ்வாறு சரி செய்யலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டன.
திடீரென நடைபெற்ற ஒத்திகையில் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பலரும் அச்சமடைந்த நிலையில், ஒத்திகை என்று தெரிந்தவுடன் நிம்மதி அடைந்தனர்.
இதையும் படிங்க: