ETV Bharat / state

அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணி - வருவாய்த்துறை அலுவலர்கள் - நாகப்பட்டினம் அதிகாரிகள்

நாகப்பட்டினம்: வெளிநாடுகளிலிருந்து கிராமப்புறங்களுக்கு வந்துள்ளவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணியை வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணி
அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணி
author img

By

Published : Mar 28, 2020, 8:19 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க அயல்நாடுகளிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை அலுவலர்கள் தனிமைப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை வருவாய் துறை அலுவலர்கள் தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணி

வருஷபத்து கிராமத்தில் கடந்த 21ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த ராஜேந்திரன் என்பவரை அடையாளம் கண்டு அவரது வீட்டிற்கு சென்று அலுவலர்கள் அவரை தனிமைப்படுத்தினர். அப்பொழுது அவரது கையில் தனிமைப்படுத்தப்பட்ட முத்திரையை குத்தினர். மேலும் தனிமைப்படுத்தல் என்றால் என்ன என்பது குறித்து அவரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்னர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் அவர்களை தனிமைப்படுத்தி வருகிறோம் என்று கூறினர்.

இதையும் படிங்க: கரோனா போரில் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.