நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவிற்கு உட்பட்ட இரட்டைமதகடி கிராமத்தில் 1,300 அடிக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து வேதாரண்யத்திற்குக் குடிநீர் கொண்டு செல்வதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகள் இன்று தொடங்கவிருந்தது. இதனையறிந்த கிராம மக்கள் ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கிணறு தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
எதிர்ப்பையும் மீறி மீண்டும் பணிகள் தொடங்கினால், ஆதார் கார்டு , ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை கீழ்வேளூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்க போவதாக கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.