மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காடு அருகே 18ஆவது வார்டுக்கு உள்பட்ட பாரதி நகரில் 100 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். பாரதி நகரின் நுழைவு வாயில் முன்பு தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,"இப்பகுதியில் கடைசியாக 1992ஆம் ஆண்டு தார் சாலை அமைக்கபட்டது. அதன்பின் சில வருடங்களில் பழுதடைந்த அச்சாலை இதுவரை சரிசெய்யப்படவில்லை. அதேபோல், நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றுவதில்லை. அப்படியே அகற்றினாலும் அந்தக் குப்பைகளை குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லாமல் அங்கேயே தீயிட்டு கொளுத்துகின்றனர்.
சந்தைப் பேட்டையிலிருந்து வரும் சாக்கடை நீரால் அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுவருகிறது. பலமுறை நகராட்சி துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளோம்” என்றனர்.
இதையும் படிங்க: அதே டெய்லர்; அதே வாடகை: திமுக, அதிமுக விளம்பரங்களில் ஒரே நபரின் முகம், காரணம் என்ன?