மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரியும், தனியார் நிறுவனங்களில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோருவது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் யாரும் செல்லாதவாறு காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'புதுச்சேரியின் அரசியலமைப்பை கேலிக் கூத்தாக்கியது பாஜக' - திருமுருகன் காந்தி விமர்சனம்!