ETV Bharat / state

மழையால் பாதித்த குறுவைப் பயிர்களை ஆய்வுசெய்ய சிறப்பு குழு அமைக்க வலியுறுத்தல்! - special team to inspect rainfed crop

நாகை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா குறுவைப் பயிர்களை தமிழ்நாடு அரசு சிறப்பு குழு அனுப்பி ஆய்வுசெய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்துகிறார்.

p r pandiyan
மழையால் பாதித்த குறுவைப் பயிர்களை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்க பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
author img

By

Published : Oct 1, 2020, 12:22 AM IST

நாகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை நேற்று (செப். 30) தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாகை மாவட்டம் பாலையூர், பெருங்கடம்பனூர், தேமங்கலம், சிராங்குடி, புலியூர், இளம்கடம்பனூர், வடக்குடி, சிக்கல், தெத்தி, ஐவநல்லூர், திருக்கண்ணங்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 5ஆயிரம் ஏக்கர் குறுவைப் பயிர்கள் முற்றிலும் சாய்ந்து நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பல்லாயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகள், குறுவைக்கான காப்பீடு செலுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ஓர் சிறப்புக் குழுவை அனுப்பி பாதிப்பைக் கணக்கீடு செய்து காப்பீட்டு நிறுவனம் மூலமாக விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பி.ஆர். பாண்டியன் பேட்டி

மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை கொண்டு வந்துள்ளது. எம்.எஸ்.பி. என்று சொல்லக்கூடிய குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதை கைவிட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதற்கான விலையினை நிர்வகிப்பதற்கான சட்டத்தை புதிய சட்டத்தின்மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

இதனை ஏற்க மறுக்கும் பிரதமர் விவசாயிகளின் போராட்டங்களை திசை திருப்பும் விதமாக எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரையை சட்டமாக கொண்டு வந்துள்ளதாக கூறி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்.

எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், வேளாண் சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவந்து மீண்டும் எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரையைத்தான் சட்டமாக கொண்டுவந்துள்ளோம் எனக் கூறி போராட்டங்களைத் திசை திருப்பி விவசாயிகளை ஏமாற்றும் முயற்சியில் பிரதமர் ஈடுபடுகிறார்" என்றார்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் தொடர் மழையால் விவசாயம் பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.