ETV Bharat / state

மீன் வளம் பெருக வேண்டி சமுத்திர ராஜனுக்கு வசந்த பூஜை! - மீன் வளம் பெருக வேண்டி சமுத்திர ராஜனுக்கு வசந்த பூஜை

நாகை: மீன் வளம் பெருக வேண்டியும் சுனாமி, புயல் உள்ளிட்ட பேரிடர்களிலிருந்து மீனவர்களை காக்கவும் வங்கக்கடலில் சமுத்திர ராஜனுக்கு வசந்த பூஜை நடைபெற்றது.

மீன் வளம் பெருக வேண்டி சமுத்திர ராஜனுக்கு வசந்த பூஜை!
author img

By

Published : Sep 11, 2019, 4:47 PM IST

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வசந்த பூஜை விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடலுக்குள் நடைபெற்ற பூஜையும் வழிபாடும்

இதனையொட்டி அக்கரைப்பேட்டை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து பூரணகும்ப மரியாதையுடன் உற்சவ அம்மன் கடற்கரையில் எழுந்தருளினார். அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் ஆடைகளுடன் கடற்கரைக்குச் சென்று அங்கு கடலில் மீன் வளம் பெருகவும் சுனாமி, புயல் உள்ளிட்ட பேரிடர்களிலிருந்து மீனவர்களை காக்கவும் சமுத்திர ராஜனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

பின்னர் பூஜை செய்த பால், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை அனைவரும் கடலுக்கு படைத்து வணங்கினர். தொடர்ந்து, ஆலயத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்களும் சிறப்பு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

Intro:நாகையில் மீன் வளம் பெருக வேண்டி, வங்கக்கடலில் சமுத்திர ராஜனுக்கு வசந்த பூஜை- ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கடலில் பால்,பழங்கள் விட்டு பூஜை செய்து வழிபாடு.

Body:நாகையில் மீன் வளம் பெருக வேண்டி, வங்கக்கடலில் சமுத்திர ராஜனுக்கு வசந்த பூஜை- ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கடலில் பால்,பழங்கள் விட்டு பூஜை செய்து வழிபாடு.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வசந்த பூஜை விழா இன்று வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அதனை தொடர்ந்து அக்கரைப்பேட்டை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து பூர்ணகும்ப மரியாதையுடன் உற்சவ அம்மன் கடற்கரையில் எழுந்தருளினார். அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் ஆடைகளுடன் கடற்கரைக்கு சென்று அங்கு கடலில் மீன் வளம் பெற வேண்டியும் சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களிலிருந்து மீனவர்களை காக்க வேண்டியும் சமுத்திரராஜனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் பூஜை செய்த பால், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை அனைவரும் கடலில் விட்டு வணங்கினர். தொடர்ந்து, ஆலயத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

nagapattinam
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.