ETV Bharat / state

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் மண்ணில் ஊற்றி அழிப்பு - நாகப்பட்டினம் காவல் துறை

நாகப்பட்டினம்: காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை காவல் துறையினர் மண்ணில் ஊற்றி அழித்தனர்.

ஒரு கோடி மதிப்புள்ள மதுபானங்கள்
ஒரு கோடி மதிப்புள்ள மதுபானங்கள்
author img

By

Published : Apr 30, 2020, 5:41 PM IST

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பல்வேறு வாகனங்களில் கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் சமீபத்தில் பிடிபட்டன. இத்தகைய மது பானங்கள் அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக நாகப்பட்டினம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தனி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இதுபோன்ற மதுபானங்களை அழிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நாகையில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த 600 அட்டைப் பெட்டிகளில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மது பானங்களைக் காவல் துறையினர் மண்ணில் ஊற்றி அழித்தனர்.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் மண்ணில் ஊற்றி அழிப்பு

மதுபானங்களை அழிக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: சில நாடுகளிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க சிறப்புக் குழு அமைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.