ETV Bharat / state

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் அணிவகுப்பு! - பொதுமக்களின் பாதுகாப்பை

மயிலாடுதுறை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கை செய்யவும் மயிலாடுதுறயில் காவல்துறையினர் அணிவகுப்பு நடைபெற்றது.

police-march-to-ensure-public-safety
police-march-to-ensure-public-safety
author img

By

Published : Nov 30, 2020, 10:53 PM IST

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில், மயிலாடுதுறை பகுதியில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்கள், ஊர்காவல் படையினர் என 145 பேர் காவல்துறை அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.

மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, நகரின் முக்கிய வீதிகளான காந்திஜி சாலை, பட்டமங்களத்தெரு, மணிக்கூண்டு வழியே சென்று மீண்டும் துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறை அணிவகுப்பு

பொதுமக்களின் நல்லுணர்வை உணர்த்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் காவலர்கள் அணிவகுத்து சென்றனர். அணி வகுப்பின் நிறைவில் காவல் நிலைய சாலையிலேயே பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியும் மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:381 எம்பிபிஎஸ் இடங்கள் இன்று நிரம்பின!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.