காவல் நிலையத்திற்கு தங்கள் வழக்குகள் தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளரையோ, உதவி ஆய்வாளரையோ சாதாரண மக்கள் சந்திக்க வேண்டும் என்றால் அவர்களை நேரடியாக சந்திக்க முடியாத சூழலே பெரும்பாலான காவல் நிலையங்களில் நிலவுகிறது.
ஒரு சாமானியன் தனது வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளரை சந்திக்க வேண்டுமென்றால், அதற்கான இடைத்தரகர்கள் மூலம்தான் தங்கள் பிரச்னையை எடுத்துச் செல்ல முடியும் என்ற எழுதப்படாத நடைமுறை பல காவல் நிலையங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் பலகையினை அப்பகுதி இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட, அப்பகுதி மக்கள் இந்த அறிவிப்பை படித்து புதிய ஆய்வாளரின் செயலைப் பாராட்டிவருகின்றனர்.